இந்த நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் கட்சிகளின் எந்த ஒப்புதலும் இல்லாமல் தன்னிச்சையான முறையில் இந்த நியமனம் இட்பெற்றுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணிக்கு சொந்தமான இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகள் தொடர்பில் அந்த முன்னணியின் அனைத்து கட்சிகளும் நாளை (19) காலை கொழும்பில் கூடி முடிவெடுக்கவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என்பதுடன், கூட்டுத் தீர்மானமின்றி செயற்படும் திறன் அவருக்கு இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் சந்தித்து இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகள் தொடர்பில் உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்கவுள்ள நிலையில், இவ்வாறான தன்னிச்சையான செயற்பாட்டை அங்கீகரிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.