செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசியப்பட்ட சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள் சிலர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி இந்த மனு இன்றைய தினம் பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.