முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு சொந்தமானது என கூறப்படும் சட்டவிரோதமான மோட்டார் வாகனம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லையென நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல் கடிதமொன்றை அனுப்புமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார். நீதிமன்ற பொறுப்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள குறித்த வாகனத்தை விடுவிக்குமாறு சுஜீவ சேனசிங்க தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறெனினும் இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்கப்பெறாததால் இந்த வழக்கை எதிர்வரும் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.