விஜய் GOAT படத்தை தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
எச்.வினோத் இயக்கத்தில் KVN தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக இடம்பெறுகின்றது.
விஜய்யின் கடைசி படம் என்பதாலும், எச்.வினோத் – விஜய் கூட்டணி என்பதாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.
கடைசியாக வெளியான GOAT திரைப்படம் சில கலவையான விமர்சனங்களை பெற்றாலும் திரையில் இரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தற்போது தன் கடைசி படமான தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகின்றார் விஜய். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒரு சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் அதனைத்தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வர வில்லனாக பாபி தியோல் நடிக்கின்றார். மேலும் பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
முழுக்க முழுக்க அரசியல் படமாக இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இதற்கு எச்.வினோத் மறுப்பு தெரிவித்திருந்தாலும் கண்டிப்பாக இப்படத்தில் விஜய் அரசியல் பேசுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போதே விஜய்யை காண இரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது விஜய் தன் இரசிகர்களுக்கு கையசைத்து அவர்களின் ஆரவாரத்திற்கு பதிலளித்த கணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த கணொளியில் விஜய்யின் லுக் செம ஸ்டைலாக இருந்தது. அதுதான் தளபதி 69 படத்தில் விஜய்யின் லுக்காக இருக்கும் என தெரிகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை இடம்பெறவுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அநேகமாக அடுத்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் கடைசி படமான தளபதி 69 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.