தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் நேற்று (17) நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
தெதிகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரொருவரே காணாமல் போயுள்ளதாக தெதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யோதகண்டிய குளத்தில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.