தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்திலேயே இத்தீர்மானம் எம்.ஏ.சுமந்திரன் எடுக்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார்.