வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இரு ஆசிரியைகளினால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி 3 மாதங்களின் பின்னர் உயிரிழந்தார்.
இந்த தாக்குதலில் காயமடைந்து மூன்று மாதங்களாக ராகம வைத்தியசாலையில் குறித்த சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.
மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இரு ஆசிரியைகளும் , மீண்டும் வென்னப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.