பொரளை மயானத்திற்கு அருகில் கித்துல்வத்த வீதியில் இன்று (17) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாரஹேன்பிட்டியிலிருந்து கித்துல்வத்தை வீதியை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பொரளை சீவலிபுர பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
விபத்து தொடர்பில் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரில் இருவர் வந்ததாகவும், விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் காரில் பொருத்தப்பட்டிருந்த கெமராவை கழற்றிவிட்டு ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.