தனுஷ், நயன்தாரா இடையேயான பிரச்சினை தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில் விவாதம் செய்து வருகின்றனர்.
நயன்தாராவின் காட்டமான அறிக்கையை தொடர்ந்து, தனுஷ் தரப்பின் விளக்கத்திற்காக அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
2015 ஆம் ஆண்டு வெளியாகிய நானும் ரவுடி தான் திரைப்படம் தனுஷ் இற்கு வெற்றிகரமான இயக்குனர் என்ற பெயரை பெற்றுக் கொடுத்ததது.
நானும் ரவுடி தான் படம் உருவான சமயத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்து சுமார் ஏழு ஆண்டுகளின் பின்னர் இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது.
இந்நிலையில் இவர்களின் திருமண காணொளியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதற்காக ‘நானும் ரவுடி தான்’ படத்துடன் தொடர்புடைய காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்த நயன் – விக்கி தரப்பு முடிவு செய்தது.
ஆனால் இரண்டு வருடங்களாக இதற்காக தனுஷ் அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நயன்தாராவின் நெட்பிளிக்ஸ் ஆவணப்படம் தொடர்பான காணொளியில் 3 வினாடி காட்சிக்கு சுமார் 10 கோடி ரூபா தனுஷ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டதாக தெரிவித்து, அதற்கு எதிராக நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ள இந்த அறிக்கை தொடர்பில் இணையத்தில் பல விவாதங்கள் நடந்து வருகிறன.
இதனைத் தொடர்ந்து நடிகைகளான நஸ்ரியா நசீம், ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரும் நயன்தாராவின் பதிவினை லைக் செய்துள்ளனர்.
இவர்கள் அனைவருமே தனுஷ் உடன் இணைந்து நடித்தவர்கள். இவர்கள் தற்போது நயன்தாராவுக்கு ஆதரவாகவும், தனுஷ் இற்கு எதிராகவும் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.