படோவிட்ட அசங்க என கூறப்படும் ரஜித்த அசங்கவுடன் தொடர்புடைய நபரொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் கீழ் நடத்தப்பட்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 5 கிராம் 200 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.