பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறையை அடுத்து பணியிடங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இன்றும் நாளையும் வழக்கமான ரயில் நேரங்களுக்கு மேலதிகமாக சில விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 7 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.