கிழக்கு சீனாவிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மோசமான பரீட்சை முடிவுகள் காரணமாக டிப்ளோமா பெறத் தவறியமை, தமது பயிற்சிநிலை தொழிலில் கிடைக்கும் சம்பளத்தினால் திருப்தி ஏற்படவில்லை என்பதனால் இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.