5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.