பஸ் ஒன்றும் ஜே.சி.பி இயந்திரமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
களுத்துறை ஹொரண வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.