ரயில் கடவைகளில் இடம்பெறும் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் , ரயில் கடவைகளில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செயற்படுங்கள் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல இது தொடர்பில் தெரிவிக்கையில்,
கவனக்குறைவாக ரயில் கடவைகளில் பயணிப்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே ரயில் கடவைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.