பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை அங்கீகரித்துள்ளது.
மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.