நயன்தாராவின் திருமண வீடியோவை நெட்பிலிக்ஸில் வெளியிட்டமைக்கு நடிகர் தனுஷ் நட்டஈடு கோரிய சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாராவின் திருமண நிகழ்வுகள் ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தை கடந்த நயன்தாராவின் சினிமா வாழ்க்கைப் பற்றிய சில விபரங்களும் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆவணப்படத்தில் நானும் ரௌவுடிதான் திரைப்படத்தின் காட்சிகள் சில உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் தன்னிடம் உத்தியோகபூர்வமான உரிமத்தை நயன்தாரா தரப்பு பெறத் தவறியுள்ளதாக தனுஷ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆவணப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு, உரிமம் தொடர்பில் தனுஷ் தரப்பிலிருந்து பதில் கோரிய போதிலும் அதற்கு கடந்த 2 வருடங்களாக எவ்வித பதிலும் வழங்கப்படவில்லையென நயன்தாரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆவணப்படத்தை நயன்தாரா தனது பிறந்தநாளான எதிர்வரும் 18ம் திகதி வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்ததுடன், அதற்கான முன்னோட்டமும் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் பாடலை வெளியிட்டமைக்கு 3 கோடி ரூபாவை நட்ட ஈடாக வழங்குமாறு தனுஷ் தெரிவித்துள்ளார். இதற்கு நயன்தாரா பதில் கடிதமொன்றையும் வெளியிட்டுள்ளமை, குறிப்பிடத்தக்கது.