10வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த செயலமர்வில் பாராளுமன்ற நடைமுறைகள், அமர்வு நடவடிக்கைகள் மற்றும் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான பதிவு எதிர்வரும் 18, 19, 20 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.