பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வார கால தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் பொது இடங்களில் கூட்டங்கள், பேரணிகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், சில இடங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.