தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ஒரே இன்னிங்ஸில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா சதம் விளாசி அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ஒரே போட்டியில் இந்திய அணி 23 ஆறு ஓட்டங்களை பெற்றிருந்தது.
சஞ்சு சாம்சன் 9 ஆறு ஓட்டங்கள், அபிஷேக் சர்மா 4 ஆறு ஓட்டங்கள், திலக் வர்மா 10 ஆறு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு முறையும், திலக் வர்மா இரண்டு முறையும் சதம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.