பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு பாகிஸ்தான் பிரதமர் செஷபாஸ் செரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமைத்துவம் மற்றும் அவரது தொலைநோக்கு பார்வை என்பவற்றின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இந்த தேர்தலினூடாக வெளிப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கையுடனான தங்களது நெருக்கமான நீண்டகால உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதியாகவுள்ளதாகவும் அந்த நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.