மாத்தறையில் சிறிய ரக லொறியொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் குறித்த விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர்களில் ஒரு வயது மற்றும் 7 வயதுகளையுடைய குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் லொறி மோதியுள்ளது. பொல்வத்த ரயில் கடவைக்கு அண்மையில் விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
லொறியின் சாரதி மற்றும் அவரின் பாட்டனார் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.