பாராளுமன்றத் தேர்தலில் விசேட வெற்றியை பதிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள ஆணைக்காக இந்தியா வாழ்த்து தெரிவிப்பதுடன், இருநாட்டு மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.