மாவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திற்கு நியுசிலாந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பிரேரணையை சபையில் கிழித்தெறிந்து மாவோரி மக்களின் பாரம்பரிய நடனமான ஹக்கா நடனத்தை அரங்கேற்றி புதிய வகையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்து பாராளுமன்றத்தின் இளம் உறுப்பினராக நியமிக்கப்பட்ட மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த Hana-Rawhiti Maipi-Clarke வெளிப்படுத்திய எதிர்ப்பு நடனம் நியுசிலாந்து பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியின மக்களின் ஸ்திரத்தை வலுப்படுத்தும் 180 வருடகால ஒப்பந்தத்தின் கொள்கைகளை மாற்றியமைக்கும் நோக்கில் இந்த சட்டப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. இது தமது உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக மாறுமென மாவோரி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Watching the Video ; https://x.com/nabilajamal_/status/1857097491532931086