பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) க்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆணையை ஏற்று அவர்கள் விரும்பிய மாற்றத்திற்கு வாழ்த்துகிறேன்.
இது புதிய பாதையையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அணுகுமுறையையும் குறிப்பதாகவும் அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.