அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவரது வெற்றிக்கு மிகப்பெரிய உதவியாக எலான் மஸ்க் இருந்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் எலான் மஸ்க் தனது செல்வாக்கை பயன்படுத்தியதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது டிரம்ப் வெற்றிக்குப் பின்னர் எக்ஸ் தளத்திலிருந்து இலட்சக்கணக்கானோர் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.
டிரம்ப் வெற்றிக்கு அடுத்த நாளிலிருந்து, எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் சிலரின் கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் நுண்ணறிவு தளம் ஒன்றின் தகவல் வெளிவந்துள்ளது.
கையடக்கத் தொலைப்பேசி செயலி மூலம் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வெளியேறிவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், ஸ்கை என்ற சமூக ஊடகத்தின் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒரே வாரத்தில் 10 இலட்சம் புதிய பயனர்கள் இந்த தளத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.