இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 60 கிலோ போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இந்த போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.