உலகில் கலாச்சாரங்கள் மட்டும் வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும் திருமணம் என்பது அனைத்து நாட்டு மக்களிடையேயும் பொதுவாக காணப்படும் வழக்கம்.
மதம் ஆகியவற்றைப் பொறுத்து திருமண முறைகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் இங்கு ஒரு இடத்தில் நிர்வாண திருமணங்கள் என்பது சகஜமாகியுள்ளது.
கரீபியன் தீவு நாடான ஜமைக்காவில் இந்த வினோத முறை தொடங்கியுள்ளது. ஜமைக்காவில் ரன்அவே என்ற பகுதியில் ஹெடோனிசம் ரிசார்ட் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை வழங்கி வருகிறது. அசாதாரணமானவற்றை விரும்புபவர்களுக்காக இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதலில் கடந்த 2001 ஆம் ஆண்டில் 8 ஜோடிகள் எந்த ஆடையும் அணியாமல் நிர்வாண திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 29 ஜோடிகளுக்கு இதுபோல அங்கு வைத்து நிர்வாண திருமணம் நடந்துள்ளது.
வெவ்வேறு நாடுகளிலிருந்து இந்த முறையைக் கேள்விப்பட்டு அவர்கள் அங்கு வந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த நிலையில் பலரும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
கணவன் மனைவி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படியான திருமணங்களை ஊக்குவிப்பதாக ரிசார்ட் தரப்பு தெரிவித்தது. இந்த முறையை பின்பற்றி உலகம் முழுவதிலும் இதுபோன்ற நிர்வாண திருமணங்கள் இன்றளவும் அங்கங்கே அரங்கேறி வருகிறது.