19 மாவட்டங்களில் இன்று இரவு 11.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான மின்னலுடன் கூடிய காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.