தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய 33 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.
அத்துடன், கெஸ்பேவ வாக்களிப்பு நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ஒருவரும் கொபேகனே பிரதேசத்தில் 57 வயதுடைய வாக்களிப்பு நிலைய ஊழியர் ஒருவரும் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.