உலகின் மிகப்பெரிய பளவப்பாறை பசுபிக் சமுத்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் ஆராய்ச்சி ஆய்வாளர்களினால் இந்த பவளப்பாறை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் பல்வேறு நுண்ணுயிர்களின் கூட்டமாக இந்த பவளப் பாறை உருவாகியுள்ளது.
சுமார் 300 வருடங்கள் பழமையானதாக இந்த பவளப்பாறை நீலத் திமிங்கிலத்தை விடவும் பெரியதென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பசுபிக் சமுத்திரத்தில் அதிகம் வெளிப்படாத பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபட்ட போதே குழுவைச் சேர்ந்த National Geograhic புகைப்படக் கலைஞர் ஒருவரினால் பவளப்பாறை அடையாளம் காணப்பட்டுள்ளது.