பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி, மன்னார் மற்றும் பியகம பகுதியைச் சேர்ந்த 49, 19 மற்றும் 26 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.