10வது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது.
நாட்டின் அனைத்து பாகங்களிலும் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வகையில் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
23 அரசியல் கட்சிகள், 33 சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 56 வேட்புமனுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய மாவட்டத்தில் 392 பேர் போட்டியிடுகின்றனர்.