பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக 90,000க்கும் அதிகமான பொலிஸார் உட்பட முப்படையைச் சேர்ந்தோர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலை கண்காணிப்பதற்காக 24 மணித்தியாலமும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும்.
அத்துடன், கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையங்களும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுத் தேர்தல் தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பதற்காக 0112 42 11 11, 0112 027 149 மற்றும் 0112 013 244 ஆகிய விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.