தென்கொரியாவின் பிரபல நடிகர் Song Jae Lim சியோல் நகரிலுள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 39 வயதான ஜே லிம் மொடல் கலைஞராக திரையுலகில் கால் பதித்திருந்தார்.
2012ம் ஆண்டு காலப்பகுதியில் வெளியான தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் ஊடாக மக்கள் மத்தியில் ஜே லிம் பிரபல்யமடைந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் அவரின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.
அவருக்கு சொந்தமான குடியிருப்புத் தொகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொலையாக இருப்பதற்கான எந்தவொரு ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லையென அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தென்கொரிய திரைத்துறையிலுள்ள நடிகர்கள் அழுத்தங்களை எதிர்கொள்கின்றார்கள் என்ற கருத்தை அவரது மரணம் வலுப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் ஜே லிம்மிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அந்நாட்டு கலைஞர்கள் தயாராகி வருகின்றனர்.