வாதுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை மற்றும் வாதுவ பகுதியைச் சேந்த இரண்டு சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 15 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.