நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். மேல், சப்கரமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது