பொதுத் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கினை வழங்கலாம் என்பதுடன் அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு அல்லது சுயேட்சை குழுவொன்றுக்கு வழங்க முடியும்.
அரசியல் கட்சி அல்லது சுயேட்சை குழுக்களின் பெயர் மற்றும் சின்னத்திற்கு முன்னால் உள்ள வெற்று பெட்டியில் புள்ளடியிட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்த வேட்பாளர்கள் 3 பேருக்கு மாத்திரம் விருப்பு வாக்கினை வழங்க முடியும். வாக்குச் சீட்டில் ஒவ்வொரு வேட்பாளருக்குமென ஒதுக்கப்பட்டுள்ள விருப்பு இலக்கத்திற்கு புள்ளடியிட முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.