இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. காலை 7.00 மணி முதல் மாலை 4 மணி வாக்களிப்பதற்கு பொதுமக்களுக்கு சந்த்ரப்பம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 13421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 196 பாராளுமன்ற உறுப்புரிமைக்கென 8361 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். 29 ஆசனங்களுக்கான உறுப்பினர்கள் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தலில் வாக்களிப்பதற்கு 17 மில்லியன் மக்கள் தகுதிபெற்றுள்ளனர்.
தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் இன்றைய தினம் பாதுகாப்பிற்கென பொலிசார் உட்பட இராணுவத்தினர் உள்ளடங்களாக சுமார் 90000 பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2022ம் ஆண்டு நாட்டில் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் ஏற்ப்பட்ட அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களையடுத்து நாட்டில் இடம்பெறும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.
தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் உட்பட சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தேர்தல் விபரங்களை உடனக்குடன் தருவதற்கு நாம் தயாராகவுள்ளோம். ஐ.டி.என். வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் வானொலி, பேஸ்புக் மற்றும் யூடியூப் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எமது செய்தி இணையத்தளமான www.itnnews.lk ஊடாக தேர்தல் குறித்தான தகவல்களை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.