பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நாளையும் அதன் பின்னரும் இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு பிரிவு ஒன்று இன்று (13) நிறுவப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் விசேட யோசனையின் பிரகாரம் இந்த விசேட பிரிவு இயங்கவுள்ளது.
இலங்கை பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை, முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரும் இணைக்கப்பட்டு இந்த விசேட செயற்பாட்டு பிரிவு இயங்கவுள்ளது.
நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் விசேட செயற்பாட்டு பிரிவொன்று இயங்குவது இதுவே முதல் தடவையாகும்.
இந்த பிரிவு தொடர்பில் விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்துவ, மேல் மாகாணம் ட்ரோன் கெமெராக்களை பயன்படுத்தி விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.