வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பயணிகளின் வசதி கருதி தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொடருந்து திணைக்களம் என்பன அறிவித்துள்ளன.
அதற்கமைய, பயணிகளின் வசதி கருதி இன்றைய தினம் 80 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாளாந்தம் பயணிக்கும் ரயில்களை விடவும் தேர்தல் காலத்தைக் கருத்திற் கொண்டு மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.