இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வாக்காளர் அட்டை கிடைக்காமல், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
* தேசிய அடையாள அட்டை
* செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
* செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம்
* அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை
* வயோதிப அடையாள அட்டை
* மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை
* தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்
*மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
*ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை