இறால் பண்ணையொன்றை நிர்மாணிப்பதற்கு வில்பத்துவை அண்மித்த விடத்தல்தீவு வனப்பாதுகாப்பு வலயத்தின் காணியொன்றை விடுவிப்பதற்கு கடந்த அரசாங்கத்தின் வனஜீவராசிகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு உயர் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
விடத்தல்தீவு வனப் பாதுகாப்பு வலயத்தின் 168 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த அரசாங்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பிலான மனு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது குறித்த தடையுத்தரவை அடுத்த வருடம் ஜூலை மாதம் 29ம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வர்த்தமானி அறிவித்தலை மீளாய்வு செய்வதற்கு புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பஸ்லி ரசிக் தெரிவித்தார்.
வனப்பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றாடலுக்கான நீதி கேந்திர நிலையம் உள்ளிட்ட தரப்பு மனுவை தாக்கல் செய்திருந்தது.