பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு பூராவும் உள்ள கலால் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களும் இம்மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்பட வேண்டும் என்று இலங்கை மது வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 3 நட்சத்திர வகைப் பிரிவுக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கும், மதுபானங்களை விற்பனை செய்வதற்கான கலால் அனுமதிப்பத்திரம் பெற்ற ஹோட்டல்களுக்கு மேற்படி உத்தரவு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.