சீனாவின் ஷூஹாய் (Zhuhai) பகுதியிலுள்ள மைதானத்திற்கு வெளியே உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மோட்டார் வாகனமொன்று மோதியதில் 35 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர்.
62 வயதுடைய நபர் காரை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவொரு கொடூரமான தாக்குதல் சம்பவமென அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் வயோதிபர்கள் உட்பட சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.
காரின் சாரதி தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு ஏற்ப்பட்ட காயம் காரணமாக சந்தேக நபர் சுயநினைவை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயர் பாதுகாப்பு உள்ள பகுதிலேயே இந்த வாகன தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவராக சந்தேக நபர் இருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.