பரீட்சை சான்றிதழ்கள் வௌியிடுவது தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால், நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, அன்றைய தினத்திற்கான சாதாரண மற்றும் இணையவழி சேவைகள் இயங்காது என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.