தென்னாபிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான நீல் மெக்கன்சி இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக குறுகிய காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய அவர் இலங்கை அணியின் பல வீரர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை அணியின் வீரர்கள் பலர் போட்டிக்கு முந்தைய பயிற்சிக்காக நேற்றிரவு (11) தென்னாபிரிக்கா நோக்கி புறப்பட்டனர்.
தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரத்ன, ஏஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ், மிலன் ரத்நாயக்க, கசுன் ராஜித மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் இதில் அடங்குவர்.
தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 27ஆம் திகதி டர்பனில் தொடங்கவுள்ளது, இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.