தேர்தல் தினத்தன்று இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு எண்ணும் நடவடிகைகள் மூன்று கட்டங்களாக இடம்பெறுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசி, உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமையை வாக்கெடுப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டது என்றும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.