சுற்றுலா விசாவில் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் இருவர் கண்டி சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 47 மற்றும் 48 வயதுடைய குறித்த இரு பெண்களும் கண்டியில் உள்ள பொருளாதார நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.