வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கந்தர மற்றும் திக்வெல்ல பொலிஸ் எல்லைக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இதன் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சாவின் பணிப்புரைக்கு அமைய திக்வெல்ல மற்றும் கந்தர பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.